Archive for August 2009
வீர சைவப்பூனை !!!
சிற்றிலக்கியங்களில் எத்தனை புதுமைகள் வந்தாலும், புதினங்களை சாராத இலக்கியஙகள் எழுதபட்டாலும், புதினங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். நரசிம்ம பல்லவனையும், வீரபாண்டியனையும் வரலாற்று விளக்கங்களால் அறிந்து கொள்ள மட்டுமே முடியும், ஆனால் அவர்களை கற்பனை மூலமாக நம் கண் முன் நிறுத்துவது புதினங்களே. அப்படி ஒரு அற்புதமான எழுத்தாளர் கல்கி
பொன்னியின் செல்வனை இரன்டாவது முறை படிக்க நேர்ந்தது. பல வருடங்களுக்குப் பிறகு. எவ்வளவு அழகிய தமிழ். எத்தனை கற்பனா சக்தி. எத்தனையொ புதினங்களை படித்திருக்கிறேன். வந்தியத்தேவனை விட இத்தனை நேர்த்தியான ஒரு கதாபாத்திரத்தை படித்த நினைவில்லை. ஒரு காலத்தில் Dan Brown வரலாற்று புதினங்களை படித்தபோது எற்பட்ட வியப்பு பொய்யாகி விட்டது. கல்கியை விடவா ஒருவர் அற்புதமாக வரலாற்றை சொல்லிவிட முடியும். அழ்வார்க்கடியான் முதல் அவனை கடிக்கும் “வீர சைவப்பூனை” வரை அத்தனை நேர்த்தியான கதாபாத்திரங்கள். குந்தவை வரலற்றில் எவ்வளவு இடம் பெற்றிறுக்கிறாள் , எவ்வளவு ராஜ ராஜ சோழனும், ராஜேந்திரனும் அவளால் அரிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது முதல் சோழ நாட்டின் வளம், பஞ்சம், உணவு, கப்பற்படை வரை அத்தனயும் கண் முன் நிற்கிறது. சோழ மன்னன் ஒருவனின் பெயரில் இன்னமும் Indonesiavil ஒரு கப்பல் பெயரிடப்பட்டுள்ளது என்பதை படிக்க நேர்ந்த்தது கல்கி எத்தனை அழகாக Indonesia வரை சென்ற அந்த கப்பற்படையை எழுதியிருக்கிறார். இன்னும் நான் படித்து முடிக்கவில்லை .. வியந்து கொண்டே படிக்கிறேன், படிக்கும்போதே எழுதுகிறேன்… தொடரும்..