Kamal’s poem in a TV interview.
Here is the poem!
கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம்!
ஆளுக்கு ஆள் ஒரு கொழிப்பிறை இருக்கியும் ஆருக்கும் விளங்காததாம்!
அதைபயந்து அதை உணர்ந்து அதைத் துதிப்பதுவன்றி பிரிதேதும் வழி இல்லையாம்!
நாம் செய்த வினையெல்லாம் முன் செய்த தென்றது விதி ஒன்று செய்வித்ததாம்!
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம்!
குருடாக செவிடாக மலடாக முடமாக கரு சேர்க்கும் திரு மூலமாம்!
குஷ்ட குக்யம் புற்று சூலை மூலம் என்ற குரூரங்கள் அதன் சித்தமாம்!
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புது ஜென்மம் தந்தருளுமாம்!
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம்!
ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாடலாம்!
நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதனின் செயலாம்!
பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னர்க்கு தரணி தந்தது காக்குமாம்!
நாநூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்!
அசுரரைப்பிளந்த போல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்ததும்,
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும்,
பிள்ளையின் கறி உண்டு நம்பினார்க்கு அருளிடும் பரிவான பர பிரம்மமே!
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு சக்தியை,
மற்றவர் வையு பயம் கொண்டு நீ போற்றிடு! அற்றதை உண்டென்று கொள்!
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி! அறிவை ஆத்திகச் சலவையும் செய்!
கொட்டடித்துப் போற்று மணியடித்துப் போற்று கற்பூர ஆரத்தியை!
தையடா ஊசியிற் தையெனத்தந்தபின் தக்கதைத் தையாதிரு !
உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின் நைவதே நன்றெனின் நை!